உடுப்பிட்டி நாவலர் சனசமூக நிலைய முன்பள்ளிக்கு மாணவர்களுக்கான புதிய தளபாடங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
சுமார் 150,000 பெறுமதியான தளபாடங்களை சனசமூகநிலைய அங்கத்தவரான புலம்பெயர் உறவு ஒருவர் வழங்கியுதவியுள்ளார்.
6 பக்கங்களைக் கொண்ட 4 மேசைகளும் 18 கதிரைகளும் புதிதாக கிடைத்துள்ளன.
இத்தோடு முன்பள்ளிக்கான குடிநீரி வசதியும் புலம்பெயர் உறவால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் மேற்படி முன்பள்ளியில் பாலருக்கான உணவு தயாரிக்கும் சமையலறை ஒன்று தேவையாக உள்ளது என தெரியவருகின்றது.