நெல்லியடி போக்குவரத்து பொலிஸாரினால் 37 பேருக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இதில் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை, வாகன அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்தியமை, தலைக்கவசம் அணியாமல் வாகனம் செலுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டன.

இவர்களில் 18 பேர் நீதி மன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். 19 பேர் நீதிமன்றத்துக்கு சமூகமளிக்கவில்லை.

சமூகமளிக்காதவர்களுக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதியினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏனைய 18 பேருக்கும் 5 இலட்சத்து 82 ஆயிரம் ரூபாவிற்கு மேல் தண்டப்பணம் செலுத்துமாறு நீதிமன்றால் உத்தரவிடப்பட்டது.

tamilvalam