வடமராட்சி வல்வெட்டித்துறையில் இயங்கி வரும் தொழிற்பயிற்சி நிலையத்தின் விளம்பரப் பெயர்ப்பலகை இன்று (30) தொழிற்பயிற்சி நிலையத்திற்கு அருகில் பொருத்தப்பட்டது.

இது வடமராட்சியில் இயங்கிவரும் ஒரேயொரு தொழிற்பயிற்சி நிலையமாகும்.

இத் தொழிற்பயிற்சி நிலையத்தில் கணனி, மின்னியல், அலுமினியம் பொருத்துதல் மற்றும் தையல் போன்ற பயிற்சி நெறிகள் கற்பிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ் விளம்பரப் பெயர்ப்பலகையானது இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் ஏற்பாட்டில் வல்வெட்டித்துறை தொழிற்பயிற்சி நிலையத்தின் ஆசிரியர் மாணவர்களினால் நாட்டி வைக்கப்பட்டது.

tamilvalam
tamilvalam
tamilvalam