வடமராட்சியின் மூத்த வீரர்களிற்கான பிறீமியர் லீக் வடிவிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியினை வல்வை விளையாட்டுக் கழகமானது நடாத்தவுள்ளது.

இது வடமராட்சி பிரதேசத்தை சேர்ந்த 35 (1986.01.01 இற்கு முன் பிறந்தவர்கள்) வயதிற்கு மேற்பட்டோருக்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியாக நடைபெறவுள்ளது.

இதற்கான பதிவுகளை வீரர்கள் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் தீருவில் விளையாட்டுக்கழக மைதானத்தில் மேற்கொள்ளமுடியும்,

வீரர்கள் தங்களது வயதினை உறுதிப்படுத்துவதற்காக கட்டாயமாக தேசிய அடையாள அட்டையினை கொண்டு செல்லவும்.

இவ் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் ஓர் அணியில் 35 இற்கும் 40 வயதிற்கும் இடைப்பட்டோர் 6பேரும், 40 வயதிற்கு மேற்பட்டோர் 3பேரும் கட்டாயம் விளையாடுதல் வேண்டும்.

அணிகளை கொள்வனவு செய்யும் உரிமையாளர்கள் எதிர்வரும் 15.04.2021 வியாழக்கிழமைக்கு முன் பிரதீபன்:− 0775801944, சண்முகதாஸ்:− 0766865737, ஜெகப்பிரதாபன்:− 0774126496 ஆகியவர்களுடன் கொள்ளவும்

tamilvalam