வடமராட்சி கிழக்கு பிரதேச மட்ட சிறுவர் பாதுகாப்புக்குழுக் கூட்டம் கடந்த திங்கட்கிழமை (22) மருதங்கேணி பிரதேசசெயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் பாடசாலை மற்றும் முன்பள்ளி மட்டத்தில் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள், கொவிட்19 அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெறுகின்ற மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள், குடும்ப வன்முறை காரணமாக கல்வியில் ஏற்படுகின்ற பின்னடைவுகள்,

மாணவர்களின் கற்றலுக்குத் தடையாக இருக்கின்ற போக்குவரத்து சேவை, சமூகத்தில் இடம்பெறுகின்ற வேண்டத்தகாத செயற்பாடுகள் போன்றவை பற்றி ஆராயப்பட்டு அதற்கான தீர்மானங்களும் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

மருதங்கேணி பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில்,

உதவிப் பிரதேச செயலாளர் , மருதங்கேணி கோட்டக்கல்வி அதிகாரி, மருதங்கேணி வைத்தியசாலை வைத்திய அதிகாரி, பாடசாலை அதிபர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், மருத்துவ மாது, முன்பள்ளி இணைப்பாளர், சிறுவர் பெண்கள் தொடர்பான பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள், கிராம மட்ட உத்தியோகத்தர்கள், மற்றும் அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள் ஆகியவர்கள் கலந்துகொண்டனர்.

tamilvalam