வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இன்று (26) காலை 7 மணிக்கு அவர்களின் எல்லைக்குள் சட்ட விரோதமாக மீன்பிடியில் ஈடுபடுவோரை கண்டித்து வீதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சட்டவிரோதமாக மீன்பிடி சுருக்குவலை பாவித்தல், வெளி மாவட்ட மீனவர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுதல், அனுமதி இன்றி சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடுதல், வேறு மீனவர்கள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபடுதல் போன்றவற்றினால்
தமது கடல் வளங்கள் பாதிக்கப்படுதல் மற்றும் நாகர் கோவில் மீனவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை சுட்டிக்காட்டியும் இதற்கான தீர்வினை பெற்றுத்தரும்படியும் கோரிக்கைகளை முன்வைத்து வீதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.