வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு இடம் பெற்று வருகிறது.

இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த இரண்டு டிப்பர் ரக வாகனங்களுடன் இருவர் நேற்றையதினம் (30) பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டு இன்றைய தினம் (31) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

tamilvalam