பருத்தித்துறை  அரசினர்  ஆதார வைத்தியசாலையின் சிற்றுண்டிச் சாலை, வாகன பாதுகாப்பு நிலையம் என்பன சுமார் மூன்று வாரங்களுக்கு மேல் மூடப்பட்டுள்ளதால் நோயாளர்கள் பார்வையாளர்கள் பெரிதும் சிரமரங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இவற்றின்  குத்தகை ஒப்பந்தகாலம் கடந்த மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவு பெற்றதைத்தொடர்ந்து புதிதாக குத்தகைக்கு வழங்குவதற்கு கேள்விப்பத்திரம் கோரப்பட்டது இதன் மூலம் முதலாவதாகத்தெரிவான ஒப்பந்தகாரர் ஒப்பந்தத்தை ஏற்க மறுத்துவிட்டார்.

இவருக்கு அடுத்ததாகக் கேள்வித்தொகை கேட்ட விண்ணப்பதாரிக்கு விதிமுறைச் சிக்கல் காரணமாக ஒப்பந்தம் வழங்க முடியவில்லை.

இதனைத் தொடர்ந்து குறித்த கேள்விப்பத்திரம் ரத்துச்செய்யப்பட்டு புதிதாக கேள்விப்பத்திரம் கோரப்பட்டுள்ளது. 

சிற்றுண்டிச் சாலை வாகன பாதுகாப்பு நிலையம்; ஆகியவற்றை நடத்துவதற்கு உரிய நெரத்தில்  புதிய ஒப்பந்தகாரர் தெரிவு செய்யப்படவில்லை.

இதன்காரணமாக வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலை வாகன பாதுகாப்பு நிலையம் ஆகியன இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இவை மூடப்பட்டுள்ளதால் விடுதிகளில் தங்கியிருந்துசிகிச்சை பெறும் நோயாளர்கள் சுடுதண்ணீர்  மற்றும் உணவு வகைகளை பெற்றுக்கொள்ள வைத்தியசாலைக்கு வெளியே உள்ள சிற்றுண்டிச் சாலைகளை நாட வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

அதேவேளை வெளிநோயாளர்கள் பிரிவில் சிகிச்சை பெறவும் விடுதிகளில் தங்கியுள்ள நோயாளர்களைப் பார்வையிடவும் வரும் பொதுமக்கள் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்த இடமின்றி வைத்தியசாலை முன் வீதியின் இருமருங்கும் நிறுத்துகின்றனர் 

இதனால் வீதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

tamilvalam
tamilvalam
tamilvalam