பருத்தித்துறை சுகாதார பிரிவிற்குட்பட்ட பொலிகண்டி பகுதியைச் சேர்ந்த நபருக்கு நேற்றையதினம் (29) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் தெரியவருவதாவது,

இவர் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பணியாற்றுகிறார், கிளிநொச்சி பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து,

குறித்த நபர் பருத்தித்துறை பொதுச் சுகாதார பரிசோதகரினால் 14 நாட்கள் தனிமைபடுத்தப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து குறித்த உத்தியோகத்தர் தனது கடமைக்காக கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு கடந்த புதன்கிழமை(24) சென்றுள்ளார்.

இருநாட்களின் பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை(26) தொற்று அறிகுறிகள் காணப்பட்டதையடுத்து கரவெட்டி சுகாதார பிரிவில் ஆலோசனைக்காக சென்ற போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மீண்டும் பி.சி.ஆர் எடுக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த நபருக்கு நேற்றையதினம் (29) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

tamilvalam