வடமராட்சி கிழக்கில் சுகவீனமுற்ற காரணத்தினால் நடக்க முடியாமல் சிரமப்பட்ட பெண்மணிக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.

உடுத்துறை வடக்கு தாளையடியைச் சேர்ந்த ஒருவருக்கே இது குறிப்பிட்ட சமூக சேவையாளர்களின் பங்களிப்பில் வழங்கப்பட்டது.

சிறப்புத் தேவையுடையோர் சங்கத் தலைவர் எஸ்.கருணாகரன் தலைமையில் மருதங்கேணி உதவிப் பிரதேச செயலர், ஜனநாயகப் போராளிகள் அமைப்பின் தலைவர் ஆர்.வேந்தன்,

பருத்தித்துறை பிரதேசசபை உறுப்பினர் வி.சுரேஸ்குமார் ஆகியோர் குறித்த பெண்மணியிடம் சக்கர நாற்காலியை வழங்கி வைத்தனர்.

tamilvalam
tamilvalam