வடமராட்சி கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் குடத்தனை அ.த.க பாடசாலையைச் சேர்ந்த 42 மாணவர்களுக்கும் நாகர்கோவில் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 8 மாணவர்களுக்கும்,

சுமார் 25 000 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இது வடமராட்சி கிழக்கை சேர்ந்த புலம் பெயர் உறவின் நிதிப்பங்களிப்பில் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் எஸ்.வேந்தன், பருத்தித்துறை பிரதேசசபை உறுப்பினர் ஆ.சுரேஸ்குமார் ஆகியோர் கற்றல் உபகரணங்களை வழங்கினர்.

tamilvalam
tamilvalam
tamilvalam