நாகர்கோவில் மகா வித்தியாலயம் மற்றும் குடத்தனை கரையூர் றோ.க.த.க பாடசாலை ஆகிய பாடசாலை மாணவர்களுக்கு ஒரு லட்சம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது நாகர்கோவிலை சேர்ந்த புலம் பெயர் நாட்டினை சேர்ந்த பழைய மாணவர் ஒருவரினால் இன்றைய நாள் 02.02.2021 அவரது 50 ஆவது பிறந்த தினத்தினை கொண்டாடும் முகமாக சில தினங்களுக்கு முன்பு வழங்கப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் குறித்த பழைய மாணவரின் தாயார், உறவினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் இவரால் இளைஞர்களின் புதிய மைதானத்துக்கான சுமார் 30 000 பெறுமதியான 4 ஒளி காலும் இருவாயி மின்விளக்கு எல்.ஈ.டி, 5 கரப்பந்து என்பனவும் தாயாரினூடாக அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

tamilvalam
tamilvalam
tamilvalam
tamilvalam
tamilvalam