இங்கு இறந்தவர்களுக்கான இறுதிச் சடங்குகளை வெளிநாடுகளில் உள்ள அவர்களின் நெருங்கிய உறவுகளின் பிரசன்னத்தோடு நடாத்துவதற்காக, இறந்தவர்களின் உடல்களை குளிரூட்டி பேணுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளது.

வல்வெட்டித்துறை நகரசபையின் ஒழுங்குபடுத்தலின் கீழ் மேற்படி வசதி ஊறணி இந்து மயானத்தில் ஏற்படுத்தப்படவுள்ளதாக தவிசாளர் கோ.கருணானந்தராசா தெரிவித்தார்.

வல்வெட்டித்துறையிலிருந்து பலர் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் நிலையில் அவர்களின் தாய் தந்தையர் அல்லது நெருங்கிய உறவினர்கள் இறக்கும்போது 

தற்போதைய சூழ்நிலையில் உடனடியாக இலங்கைக்கு வந்து இறுதி சடங்கில் கலந்துகொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.

எனவே வல்வெட்டித்துறையைச் சேர்ந்த புலம்பெயர் மக்களின் உதவியுடன் குறித்த மயான வளாகத்தில் குளிரூட்டி வசதிகளைக் கொண்ட கட்டடம் ஒன்று கட்டப்படவுள்ளதாக மெலும் அவர் தெரிவித்தார்.

இதற்கான ஆரம்ப தொகை சேர்ந்ததன் பின்னர் விரைவில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

தற்போதைய கொரோனா நிலை காரணமாக இலண்டன் மற்றும் சில நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தருதல் மட்டுப்படுத்தப்பட்டு அல்லது தவிர்க்கப்பட்டு இருக்கும் நிலையில்,

இந்த குளிரூட்டும் வசதி வந்தால், வெளிநாட்டில் உள்ள உறவுகள் வரும்வரை இங்குள்ள அவர்களுக்குரியவர்களின் இறந்த உடலங்களை பேணி வைத்திருந்து

உறவுகள் வந்து இறந்தவர்களுக்குரிய இறுதிச் சடங்குகளை நிகழ்த்துவதற்கு வாய்;ப்பாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

tamilvalam