வல்லை பகுதியில் நேற்று முன்தினம் உந்துருளியில் சென்ற பெண் ஒருவரின் ஒரு பவுண் தங்கச் சங்கிலி,

கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

கைது செய்யப்பட்ட 2 சந்தேக நபர்களும் புன்னாலைகட்டுவன், குப்பிளான் பகுதியினை சேர்ந்தவர்கள் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் இருவரும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் என தெரிவித்த பொலிஸார், 

போதைப்பொருள் வாங்குவதற்கு என இவ்வாறு வீதியால் சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலியினை அபகரித்ததாக தெரிவித்தனர்.

இவர்கள் இருவரும் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரையும் நேற்று மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஆனந்தராஜா அவர்களின் வாசஸ்தலத்தில் முற்படுத்திய போது,

உந்துருளி உரிமையாளரான சந்தேக நபரை எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இரண்டாவது சந்தேக நபர் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

tamilvalam