மருதனார்மடம் சந்தையிலுள்ளவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து

நேற்றைய தினம் (13) வடமராட்சி வியாபாரிகளில், உடுப்பிட்டியில் 4 பேரும், வல்வெட்டித்துறையில் 2 பேரும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தைகளில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த மேற்படி நபர்கள் மருதனார் மடம் சந்தைக்கு சென்று மரக்கறி கொள்வனவு செய்து வருபவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நேற்று முதல் இரு சந்தைகளும் வியாபாரமின்றி முடங்கிய நிலையில் காணப்படுகின்றது.

மேலும் கடந்த வெள்ளிக்கிழமை உடுப்பிட்டி சந்தை வியாபாரிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று ஒருவருக்கும் இனங்காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

tamilvalam