நெல்லியடி மத்திய கல்லூரியில் இன்று (20) வடமராட்சி மற்றும் கோப்பாய் கல்வி வலய பரீட்டை மேற்பார்வை உத்தியேகத்தர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு நடைபெற்றது.

உதவிப்பரீட்சை ஆணையாளர் தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில்,

வடமராட்சி வலயக் கல்விப்பணிப்பாளர், வலிகாமம் உதவிக் கல்விப்பணிப்பாளர், பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மற்றும் பரீட்சை நிலைய பொறுப்பு அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் என்போர் கலந்து கொண்டனர்.

பருத்தித்துறை பொதுச் சுகாதார பரிசோதகர் ஆ.ஜென்சன் றொனால்ட் இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போது

கபொத சா/த பரீட்சை நடாத்தும் போது சுகாதார நடைமுறைகளை மிக இறுக்கமாக பின்பற்றவேண்டும். தவறினால் பெருமளவில் தொற்று பரவும் வாய்ப்பு உருவாகலாம் என தெரிவித்தார்.

மேலும் தற்போது இலங்கையில் கொரோனா தொற்று மற்றும் மரணங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. 

தற்போதைய நிலை கடந்த க.பொ.த. உ/த பரீட்சை இடம்பெற்ற சூழ்நிலையை விட அதிக ஆபத்துடையதாகவே காணப்படுகிறது.

எனவே அனைவரும் கொரோனாக் கட்டுப்பாட்டுக்கான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மிக இறுக்கமாக கடைப்பிடித்து பரீட்சைகளை நடத்த முன்வரவேண்டும்.

உடல் வெப்பம் அளவிடுதல், கைகளை சவர்க்காரம் நீர் கொண்டு சுத்தப்படுத்துதல், தனிநபர் இடைவெளி பேணுதல் என்பன மிக முக்கியமானவை.

பரீட்சை வினாத்தாள் பொதிகளை பிரிக்கும் முன்பாகவும் வினாத்தாழ்களை விநியோகிக்கும் முன்பும் கைகளை கிருமிநீக்கம் செய்வதோடு

மேற்பார்வையாளர்கள் மூக்கு வாயை மூடி சரியான விதத்தில் முகக்கவசம் அணிந்திருத்தல் வேண்டும்.

அவரச நிலைகளைக் கையாளஇ பிரிவுக்குரிய சுகாதார வைத்திய அதிகாரிஇ பொது சுகாதார பரிசோதகரின் தொலைபேசி இலக்கங்களைக் காட்சிப்படுத்த வேண்டும்.

எந்த வேளையிலும் சுகாதார பிரிவினர் ஒத்துழைப்பு வழங்க தயாராகவே இருப்பர்.

தனிமைப்படுத்தப்பட்டவரோ அல்லது தொற்றுடையவரோ அடையாளப்படுத்தப்பட்டு பரீட்சை நிலையத்துக்கு அனுமதிக்கப்பட்டால் கலவரமடையத் தேவையில்லை.

பரீட்சை ஆணையாளரினதும் சுகாதாரப் பிரிவினரதும் ஆலேசனையைப்படி உரியவகையில் செயற்பட வேண்டும்.

மாணவர்கள் உத்தியோகத்தர்கள் யாவரும் சமூகப்பொறுப்புடன் செயற்பட்டால் பரீட்சையை வெற்றிகரமானதாகவும் பாதுகாப்பானதுமாக நடாத்தி முடிக்கலாம் என மேலும் தெரிவித்தார்.

tamilvalam