வடமராட்சியில் வீட்டு மதில் பாய்ந்து திருட முயற்சித்தவர்கள் கண்காணிப்பு கருவியில் சிக்கி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் பற்றி மேலும் அறிகையில்,

நேற்று முன்தினம் காலை கரணவாய் கிழக்கில் உள்ள யாரும் இல்லாத வீடொன்றினுள் மதில் பாய்ந்தவர்கள்,

அங்கு இருந்த தண்ணீர் இறைக்கும் மோட்டாரைத் திருட முயற்சித்துள்ளனர்.

இச் சம்பவத்தை வெளி மாவட்டத்தில் இருந்து வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமரா மூலம் அவதானித்த வீட்டு உரிமையாளர்,

வீட்டைப் பராமரிப்பவருக்கு தொலைபேசி மூலம் இதை அறிவித்ததைத் தொடர்ந்து,

அருகில் உள்ள இளைஞர்களுடன் விரைந்து வந்து வீட்டை சுற்றி வளைத்த போது 2 பேர் பிடிபட்டுள்ளார்கள்.

உடனடியாக நெல்லியடிப் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு பொலிசார் வருகை தந்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் கரணவாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அறியமுடிகின்றது.

தொடர்ந்து நேற்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் இருவரும் முன்னிலைப்படுத்தப்பட்டு நீதிபதியினால் சந்தேக நபர்கள் இருவரையும்,

ஒவ்வொருவருக்கும் ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்லுமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

tamilvalam