நாளை (23) புதன்கிழமை வடமராட்சி வடக்கு, தெற்கு, மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிகை அலங்கரிப்பு நிலையங்கள் பூட்டப்பட்டிருக்கும்.

இப்பிரிவுகளுக்கு உட்பட்ட சிகை ஒப்பனையாளர் கூட்டுறவுச் சங்கத்தின் விசேட பொதுக் கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும்,

நாளை இடம் பெறவுள்ளதால் சிகை அலங்கரிப்பு நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் என்பதனை,

வடிக்கையார்கள் கவனத்தில் எடுக்குமாறு சங்க செயலாளர் அறிவித்துள்ளார்.

நாளை நடைபெறவுள்ள நிகழ்வு காலை 9.30 மணிக்கு சங்கக் காரியாலயத்தில் தலைவர் சி.சுகிதரன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இதில் பிரதம விருந்தினராக வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலர் ஈ.தயாரூபன் கலந்து கொள்ளவுள்ளார்.

tamilvalam