எல்லை தாண்டி அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களால் வடமராட்சி கிழக்கு மீனவர்களின் வலைகள் பாதிப்பு.

இதன்படி வெற்றிலைக்கேணி மீனவர்கள் மூவரது பல இலட்சம் ரூபா பெறுமதியான மீன்பிடி வலைகள் வெட்டப்பட்டு நாசம் செய்யப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் கடற் தொழிலுக்காகச் சென்ற மீனவர்கள் மூவரது வலைகளே இவ்வாறு இந்தியப் படகுகளால் துண்டாடப்பட்டும், இழுத்துச் செல்லப்பட்டும் உள்ளன.

வங்கிகளில் கடன்பட்டு வலைகளைக் கொள்வனவு செய்தே நாம் தொழில் செய்கின்றோம் என்றும்,

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுத்து தமக்கு உதவ வேண்டும் என பாதிக்கப்பட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

tamilvalam