வடமராட்சியில் உடுப்பிட்டியை சேர்ந்த இளைஞன் ஒருவன் நேற்றைய நாள் கடலில் மூழ்கி உயிரிழந்தமை அப்பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது

சந்தை வீதி உடுப்பிட்டியை சேர்ந்த நல்லையா அபர்காஸ் என்ற 17 வயதான இளைஞன்,

நேற்று பிற்பகல் 5.00 மணியளவில் தனது நண்பர்கள் 9 பேருடன் தொண்டைமானாறு சிறு கடல் பகுதியில் குளிக்கச் சென்றுள்ளார்.

இதன்போது இவர் அலையில் சிக்கி தத்தளித்தாகவும் உடனே இதனை அவதானித்த நண்பர்கள் கடலில் குதித்து இவரைக் காப்பாற்ற முற்பட்டதாகவும் 

ஆபத்தை உணர்ந்த குறித்த நபர் காப்பாற்ற முயற்சித்த நண்பர்களை வரவேண்டாம் என்று சைகை காட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இவரைத் தேடி மீட்கப்பட்டு,

வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது இவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிய வருகின்றது.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவர் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியின் பழைய மாணவன் (2019 ஆம் ஆண்டு க.பொ.த சா/த) என தெரிய வருகின்றது.

tamilvalam
tamilvalam