பருத்தித்துறையில் அமைந்துள்ள சித்த மத்திய மருந்தகத்திற்கு சுவாச நோய்களுக்கான ஆவி பிடிக்கும் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

30 000 ரூபா பெறுமதியான இவ்வுபகரணம் ஹாட்லிக் கல்லூரி 2002 அணி மாணவர்களின் நிதி அனுசரணையில் அணி சார்பாக நேற்று ப.சுரேஸ் இனால் வழங்கி வைக்கப்பட்டது.

இது தொடர்பாக வைத்தியசாலையினால் பல தரப்பிடம் கோரிக்கை விடுத்தும் கிடைக்காததை அடுத்து தற்போது வழங்கப்பட்டுள்ளதாகவும்,

இதன் மூலம் தினமும் 80 தொடக்கம் 100 பேர் வரை பயனடைவார்கள் எனவும் வைத்தியசாலை நிர்வாகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tamilvalam
tamilvalam