கரவெட்டி மத்தி ஜே/367 கிராம அலுவலர் பிரிவிற்கு உட்பட்ட நெல்லியடி புதிய சந்தையில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்பவர்க்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் இவர்களுடன் கடந்த வாரங்களில் தொடர்புபட்ட நண்பர்கள், அயலவர், உறவினர்கள் யாராவது தங்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாமென சந்தேகப்படின்,

உங்கள் பிரிவு பொது சுகாதார பரிசோதகருடன் தொடர்புகொள்வதன் மூலம் பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்ளமுடியும் எனவும்,

இது தொடர்பாக யாரும் பதட்டமடைய தேவையில்லை எனவும், இவை வழமையான நடைமுறை எனவே இப்பிரிவுகளுக்குட்பட்டவர்கள் தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றவும்,

சிறு பிள்ளைகள், வயோதிபர்களை தேவையற்று நடமாடித்திரிய விடவேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

775549192 என்ற பொது சுகாதார பரிசோதகருடைய தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ள முடியும் எனவும் கிராம அலுவலரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

tamilvalam