வடமராட்சியை சேர்ந்தவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம்,
இன்று (23) திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயர் குருதி அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் மயக்கமடைந்த இவர்,
நோயாளர் காவு வண்டியில் அழைத்து செல்லப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்,
அனுமதிக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
தற்போது அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.