வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 2021 ஆம் ஆண்டிற்கான பதிவு செய்யப்பட்ட கலை இலக்கிய மன்றங்களுக்கான ஆக்கத்திறன் போட்டிகள்,

வடக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கான ஆக்கத்திறன் போட்டிகள், வடக்கு மாகாண கலைக் குரிசில் விருது, வடக்கு மாகாண இளைஞர் விருது,

வட மாகாண சிறந்த நூற்பரிசு, வட மாகாண நூற்கொள்வனவு, நடுவர் தெரிவு ஆகிய வேலைத் திட்டங்களிற்கு பொருத்தமான பயனாளிகளை தெரிவு செய்வதற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

இவ் வேலைத்திட்டங்களில் இணைந்து பயன்பெற விரும்புபவர்கள் பிரதேச செயலகத்திற்கு,

அலுவலக நேரத்தில் வருகை தந்து உரிய விபரங்களுடன் விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

இவை யாவற்றிக்குமான இறுதித் திகதி 31.03.2021 ஆகும் விண்ணப்பதாரிகள் விண்ணப்பப் படிவங்களை 22.03.2021 ஆம் திகதிக்கு முன்பதாக பிரதேச செயலகத்தில் ஒப்படைக்கவும். 

மேலும் கலாசார அபிவிருத்திச் செயற்றிட்டம் 2021 இன் கீழ் வழங்கப்படவுள்ள கலைமன்ற அபிவிருத்தி நிதி,

கலைஞர் ஊக்குவிப்பு நிதி என்பன தொடர்பான விடயங்களிற்கும் பொருத்தமானவர்கள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

tamilvalam